உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடந்தையில் இன்று போக்குவரத்து மாற்றம்

குடந்தையில் இன்று போக்குவரத்து மாற்றம்

கும்பகோணம்: ''கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ஊர்வலம் நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,'' என கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி., சிவ.பாஸ்கர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலை 3 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை தஞ்சை மார்க்கத்திலிருந்து கும்பகோணத்திற்கு வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆதிகும்பேஸ்வரன் மேலவீதி, திருமஞ்சவீதி, ஆழ்வான்கோயில்தெரு, காமாட்சிஜோசியர் தெரு, மடத்துதெரு, பாலக்கரை, கோர்ட், நால்ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டை அடைய வேண்டும். அதேபோல், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சை மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் சர்ச் ரோடு, காமராஜர் ரோடு, ரயிலடி, சிஆர்சி, நால்ரோடு, வட்டிபிள்ளையார்கோயில், செட்டிமண்டபம் பைபாஸ் வழியாக தஞ்சை சாலையை அடைய வேண்டும். இவ்வாறு டி.எஸ்.பி., பாஸ்கர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை