உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மாமூல் கேட்கும் நபர்களை தண்டிக்க வணிகர் கோரிக்கை

மாமூல் கேட்கும் நபர்களை தண்டிக்க வணிகர் கோரிக்கை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம், சங்க தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.பொதுச் செயலர் சத்தியநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:வணிகர்களை மிரட்டி மாமூல் கேட்பது, கட்டாய நன்கொடை கேட்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களை சமூக விரோத கும்பல்கள் செய்கின்றன. இவர்கள், சில அரசியல் கட்சிகளை பின்புலமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் மீது கடும் சட்டப் பிரிவுகளின் கீழ், உரிய தண்டனையை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு புதிய சட்ட அமலாக்கத்தை கொண்டு வர வேண்டும்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளன. வணிகர்கள் எந்த அளவிற்கு, கையில் பணம் கொண்டு செல்லலாம்; உரிய ஆவணங்கள் என்னென்ன போன்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெளிவுபட அறிவிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் செல்லும் வழியை கண்காணித்து தடுத்து நிறுத்தாமல், வணிகர்களை பிடித்து வைத்து, அலைகழிக்கும் செயலை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ