மேலும் செய்திகள்
'பார்க்கிங்' வசதி அதிகரிக்க பக்தர்கள் வேண்டுகோள்
23-Jul-2025
தஞ்சாவூர்:முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில், பக்தர்கள் வசதிக்காக உபயதாரர் கட்டிக்கொடுத்த தங்கும் விடுதியை, மூன்று ஆண்டுகளாக திறக்காமல் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்கள் தங்க வசதி கிடையாது. சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்ற தொழிலதிபர், 7,935 சதுரடி இடத்தை விலைக்கு வாங்கி, 6,344 சதுரடி இடத்தில், நான்கு கட்டடங்களில் மொத்தம், 16 அறைகளை கட்டி, சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு 2022ல் தானமாக ஒப்படைத்தார். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், கோவில் நிர்வாகம், விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், பூட்டியே வைத்துள்ளது. இதனால், அந்த விடுதி கட்டடம் தற்போது புதர்கள் மண்டி சேதம்அடைந்து வருகிறது. அப்பகுதியினர் கூறுகை யில், 'உபயதாரர் தானமாக வழங்கிய கட்டடத்தை, அறநிலையத்துறை மூன்று ஆண்டுகளாகியும், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், வீணாக்கி வருவது வேதனையாக உள்ளது' என்றனர்.
23-Jul-2025