மேலும் செய்திகள்
நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது
20-Apr-2025
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
21-Apr-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி, 28. இவர்கள் இருவரும், 13 ஆண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துகொண்டு, சொந்த ஊரை விட்டு வெளியேறி, திருவோணம் பகுதியில் வசித்து வந்தனர்.இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு, கலியமூர்த்தியும், மகாலட்சுமியும் எட்டுபுளிக்காடு கிராமத்திற்கு சென்று இருந்தனர்.இதையடுத்து, ஒரு வாரமாக மகாலட்சுமியின் சகோதரரான முருகானந்தத்திடம் கலியமூர்த்தி தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை, கலியமூர்த்தி தன் குழந்தைகளுடன் வெளியே சென்ற போது, முருகானந்தத்திற்கும் கலியமூர்த்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முருகானந்தம், 25, தன் உறவினர்களான செந்தில்குமார், 32, வீரமுத்து, 34, ஆகியோருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த அவர்களுடன் சேர்ந்து மூவரும், கலியமூர்த்தியை சாரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த கலியமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலையில் ஒன்பது இடங்களில் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில், கலியமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தம், செந்தில்குமார் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள வீரமுத்தை தேடி வருகின்றனர்.
20-Apr-2025
21-Apr-2025