உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / டூ-வீலர் மீது மர்ம வாகனம் மோதியதில் இருவர் பலி

டூ-வீலர் மீது மர்ம வாகனம் மோதியதில் இருவர் பலி

வலங்கைமான்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த, மாலாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 34. இவரது நண்பர், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த, உத்தமதானபுரத்தைச் சேர்ந்த வினோத், 35. இருவரும், நேற்று முன்தினம் இரவு, பாபநாசத்தில் இருந்து உத்தமதானபுரம் சென்று கொண்டிருந்தனர்.இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஒட்டினார். தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில், சாலபோகம் புறவழிச்சாலை பாலம் அருகில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் அதே இடத்தில் இறந்தனர். வலங்கைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை