உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / போதையில் கணவன் டார்ச்சர் குத்திக்கொன்ற மனைவி கைது

போதையில் கணவன் டார்ச்சர் குத்திக்கொன்ற மனைவி கைது

கபிஸ்தலம்: போதையில் தினமும் அடித்து சித்ரவதை செய்த கணவனை, காதல் திருமணம் செய்த மனைவி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், எருமைபட்டியை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 45; கொத்தனார். இவரது மனைவி சிந்தனைசெல்வி, 25. இருவரும், 10 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.கலியமூர்த்தி தினமும் குடித்துவிட்டு, மனைவியை அடித்து கொடுமை செய்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த கலியமூர்த்தி, சிந்தனைசெல்வியை அடித்துள்ளார்.சிந்தனைசெல்வி, தென்னங்கீற்று அறுக்க பயன்படுத்தப்படும் கத்தியால், கலியமூர்த்தியின் கழுத்தில் குத்தினார். சம்பவ இடத்திலேயே கலியமூர்த்தி இறந்தார்.கபிஸ்தலம் போலீசார், சிந்தனைசெல்வியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !