உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மூன்று குழந்தைகளுடன் பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

மூன்று குழந்தைகளுடன் பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

தஞ்சாவூர்:கல்லணை கால்வாயில், ஒரு பெண், 5 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர், பூச்சந்தை பகுதியில் செல்லும் கல்லணை கால்வாயில், 20 கண் பாலம் உள்ளது. நே ற்று மதியம், கைக்குழந்தை, 5 வயது சிறுவன், 14 வயது சிறுமியுடன் வந்த 35 வயது பெண் ஒருவர், கல்லணை கால்வாய் கரையில் நடந்து சென்றுள்ளார். அந்த பெண், திடீரென இரண்டு குழந்தை மற்றும் சிறுமியுடன் கல்லணை கால்வாயில் குதித்துள்ளார். ஆற்றில் தண்ணீரின் வே கம் அதிகம் இருந்ததால், நான்கு பேரும் நீரில் மூழ்கினர். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள், ஆற்றில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 14 வயது சிறுமி, 5 வயது சிறுவன் மற்றும் பெண் மூவரையும் இறந்த நிலையில் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நேற்று இரவு வரை குழந்தையை தேடினர். குழந்தை கிடைக்கவில்லை. அவர்கள் யார்; எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை