உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி அல்லிநகரம் நகராட்சி தெருக்களில் தூர்ந்து போன கால்வாய்களால் ரோட்டில் சாக்கடை ஆறு

தேனி அல்லிநகரம் நகராட்சி தெருக்களில் தூர்ந்து போன கால்வாய்களால் ரோட்டில் சாக்கடை ஆறு

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரோடுகள், தெருக்களில் சாக்கடை நீர் ஆறு போல ஓடியது. மழை பெய்ததால், தூர்ந்து போன சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் மேவி சென்றதால், அசுத்தங்கள் எல்லாம் ரோட்டில் தேங்கி நின்றன.நகராட்சி பகுதியில் முறையான சாக்கடை கால்வாய், மழைநீரோடை வசதிகள் இல்லை. திட்டமிடப்படாத பணிகளே இதற்கு காரணம். சாக்கடை சுத்தம் செய்வதே இல்லை. நகரின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுரை, பெரியகுளம் ரோட்டிலும் இதே நிலைதான் உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்ந்து போய் உள்ளன. இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலே மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடும் நிலை உள்ளது.கால்வாய்களில் அடைத்து நிற்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், ஓட்டல் கழிவுகள் என அசுத்தங்களும் கால்வாயை விட்டு ரோட்டுக்கு வருகின்றன. ரோடு முழுவதும் சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்துடன் ஆறு போல் ஓடுகிறது. இவற்றில் நடந்து சென்றால், நோய்கள் வருவது உறுதி. கழிவு: நேற்று மாலை 3.30 மணிக்கு மழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து கால்வாய்களுக்குள் புகுந்தது. அடைப்புகளால், சாக்கடைகள் மேவி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.பெரியகுளம் ரோட்டில், அல்லிநகரம் போலீஸ்ஸ்டேஷன் அருகில் இருந்து, ஜி.எச்., ரோடு சந்திப்பு, தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி பகுதி, மீறுசமுத்திர கண்மாய் ரோடு(லேக் ரோடு), பஸ்ஸ்டாண்ட் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவு அசுத்தமான நீர் கருமையான நிறத்தில் ஓடியது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நின்றது. நகராட்சி நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ