உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் சிசு மரணம் தமிழக சராசரியை விட அதிகரிப்பு

தேனி : தமிழக சராசரியை விட,தேனி மாவட்டத்தில் சிசு மரணம் அதிகரித்துள்ளது. கடந்த 1940ல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. இன்று நான்கு மடங்கு அதிகரித்து (2011)121 கோடியை எட்டியுள்ளது. உலக மக்கள் தொகை 681 கோடி. தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம். பிறப்பு: உலகம் முழுவதும் சராசரி பிறப்பு விகிதம் ஆண்டிற்கு 20 ஆகவும். இந்தியாவில் 22.5 ஆகவும், தமிழகத்தில் 16.3 சதவீதமாகவும் உள்ளது.

இறப்பு: உலக அளவில் 8 சதவீதம், இந்தியாவில் 7.3 சதவீதம், தமிழகத்தில் 7.6 சதவீதம் இறப்பு உள்ளது. சிசு: சிசு மரணம் ஆண்டிற்கு இந்தியாவில் 50 சதவீதம், தமிழகத்தில் 28 சதவீதம், தேனி மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ளது. சிசு மரணத்தில் தமிழக சராசரியை காட்டிலும் தேனி மாவட்டத்தில் ஒரு சதவீதம் அதிகமாகும். காரணம்: குறைபிரசவம், கர்ப்பிணிகளுக்கு உரிய பரிசோதனை செய்யாமை, வீடுகளில் பிரசவம் போன்ற காரணங்களினால் சிசுமரணம் அதிகம் ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இதனை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ