உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு 72 இடங்களில் பயிற்சி

விவசாயிகளுக்கு 72 இடங்களில் பயிற்சி

தேனி : மாவட்டத்தில் குறுவை பருவத்திற்காக 'அட்மா' திட்டத்தில் வேளாண் துறை சார்பில் பயிர் சாகுபடி தொழில்நுட்பம், பயிறு எண்ணெய், மண்புழு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, இடுபொருள் தயாரித்தல், தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, வேளாண் விற்பனை மையம் சார்பில் இநாம் விற்பனை, வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டுதல், அங்க விதைச் சான்று, பட்டு வளர்ச்சி துறை சார்பில் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம், தில்லேபியா மீன்வளர்ப்பு உள்ளிட்ட 15 தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.72 இடங்களில் நடக்க உள்ளது. ஒவ்வொரு பயிற்சியிலும் 40 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். பயிற்சியில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, விதைச்சான்று, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் இணைந்து பயிற்சி வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி