உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியகுளம் தென்கரையில் கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் ஆயிரம் கண்ணுடைய மாரியம்மாள் என்ற புனைப்பெயரும் உண்டு. கவுமாரியம்மன் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங் கியது. செயல்அலுவலர் சுதா, தேனி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.பி.எஸ்.முருகேசன், மாவட்ட அய்யப்ப சேவா சங்க தலைவர் ஜோதிசாமி, கவுன்சிலர் ராஜா, வர்த்தக பிரமுகர்கள் பி.சி.சிதம்பரசூரியவேலு, கனகசபை, வெள்ளையப்பன், அருணாச்சலக்கண்ணன், அய்யாச்சாமி, சிவபாலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்