உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் பலாத்காரம்: வாலிபர் கைது

பெண் பலாத்காரம்: வாலிபர் கைது

திண்டுக்கல்: தேனி பெண்ணிடம் முகநுாலில் பழகி கற்பழித்து திருமணம் முடிக்க மறுத்த திண்டுக்கல் வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் 25 வயது பெண். ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடன் முகநுாலில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்த டிரைவர் கோபி32, திருமணமானதை மறைத்து பழகினார். அடிக்கடி அந்த பெண்ணை சந்திப்பதற்காக திருப்பூருக்கு சென்றார்.இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக இருந்தனர்.சில நாட்களுக்கு முன் திருமணம் செய்ய வலியுறுத்தினார். ஆத்திரமடைந்த கோபி அந்த பெண்ணுடன் பேசுவதை தவிர்த்தார்.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தபெண் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி வழக்குபதிந்த 4 மணி நேரத்தில் கோபியை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை