மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது
தேனி, : பொம்மையகவுண்டன்பட்டி தெற்கு பஜார் 2வது தெரு கார்த்திக் பெருமாள் 28. இவருடைய மனைவி திவ்யா 25. இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் திவ்யாவை அவரது கணவர் அடித்து பிரச்னை செய்து வந்தார். இதனால் பாலன்நகரில் உள்ள தாய் வீட்டிற்கு திவ்யா சென்றார். மேலும் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு கார்த்திக்பெருமாள் சென்றார். வீட்டில் இருந்த திவ்யா, அவரது தாயாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். திவ்யா புகாரில் கணவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.