உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.6.05 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு

ரூ.6.05 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு

தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ., அருகே வசிப்பவர் ராஜசேகர். இவரது இடத்திற்கு அருகே 2198 ச.அடி காலிமனை இருந்தது. இதன் உரிமையாளர் சிவகங்கை சேர்ந்த புகழேந்தி. இவர் தனது சித்தாப்பா என்றும் இடத்தை விற்பனை செய்ய தனக்கு உரிமை வழங்கியதாகவும் விலை ரூ. 6 லட்சம் என அல்லிநகரத்தை சேர்ந்த விஜயசாரதி, ராஜசேகரிடம் கூறினார்.இதனை நம்பிய ராஜசேகர் பணமாக ரூ. 2லட்சம், வங்கி கணக்கில் இரு தவணைகளாக ரூ. 4.05 லட்சம் வழங்கினர். கிரைய ஒப்பந்தத்தில் கருவேல்நாயக்கன்பட்டி முருகன் என்பவர் சாட்சி கையெழுத்திட்டார். ஆனால் இடத்தின் உரிமையாளர் புகழேந்தியை அழைத்து வந்து இடத்தை பதிவு செய்து தராமல் விஜயசாரதி மோசடி செய்தார். இதனால் ராஜசேகர் மகன் கவுதம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவில் விஜயசாரதி, இடத்தின் உரிமையாளர் புகழேந்தி, முருகன் ஆகியோர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை