உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாக்குதல்: எஸ்.ஐ., போலீஸ்காரர் சஸ்பெண்ட்

தாக்குதல்: எஸ்.ஐ., போலீஸ்காரர் சஸ்பெண்ட்

மூணாறு: போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை தாக்கியதாக எஸ்.ஐ., போலீஸ்காரர் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இடுக்கி மாவட்டம், கட்டப்பனை எஸ்.ஐ., சுனேக், போலீஸ்காரர் மனு பி ஜோஸ் ஆகியோர் இரட்டையாறு பகுதியில் ஏப்.25ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த இரண்டு டூவீலர்களை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்றபோது போலீஸ்காரர் மனு பி.ஜோஸை இடித்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அச்சம்பவத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட புளியன்மலையைச் சேர்ந்த ஆஷிப் 18,பை போலீசார் தாக்கியதாக அவரது தாயார் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி எஸ்.ஐ., சுனேக், போலீஸ்காரர் மனு பி.ஜோஸ் ஆகியோரை பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்து மாவட்ட எஸ்.பி. விஷ்ணுபிரதீப் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை