மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
போடி, ; மதுரையிலிருந்து கொச்சினுக்கு போடிமெட்டு வழியாக சென்ற கார் தீ பிடித்து முழுவதும் எரிந்தது. இவ் விபத்தில் மூவர் உயிர் தப்பினர்.தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போடிமெட்டு. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 38. இவர் தனது நண்பர்கள் ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகியோருடன் மதுரையிலிருந்து கொச்சின் ஏர்போர்ட்க்கு போடிமெட்டு வழியாக காரில் சென்றுள்ளனர். போடிமெட்டு 17 வது வளைவில் திரும்பும் போது எதிர் பாராத விதமாக கார் தீ பிடித்தது. கார் தீ பிடித்ததை அறிந்த கார்த்திக் ராஜா உட்பட மூவரும் காரை விட்டு உடனே கீழே இறங்கினர். தீயை அணைக்க முடியாத நிலையில் கார் முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025