உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறில் ஏழு பேர் மீது வழக்கு

தகராறில் ஏழு பேர் மீது வழக்கு

தேனி : தேனி - கம்பம் ரோடு பள்ளிவாசல் தெரு புகழேந்தி 49. அதேப்பகுதி ரஞ்சித்குமார் 36. கதிரேசன் 32. மூவரும் பெயிண்டர்கள். மூவரும் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பின் புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு திரும்பினர். அப்பகுதியில் உள்ள பெயிண்ட் கடை அருகே வந்தபோது, புகழேந்தியின் மூத்த சகோதரர் பால்ராஜின் மகன் முத்துக்குமாரிடம் 3 பேர் வாக்குவாதம் செய்தனர். இதனை தட்டிக்கேட்ட போது தகராறு ஏற்பட்டு அலைபேசியில் அழைத்தவுடன் மேலும் சிலர் தாக்கி மிரட்டிச் சென்றனர். காயம் அடைந்த புகழேந்தி உட்பட மூன்று பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து புகழேந்தி புகாரில், எஸ்.ஐ., ஜீவானந்தம் ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி