உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி வளாகத்தில் ரகளை செய்த 10 பேர் மீது வழக்கு

பள்ளி வளாகத்தில் ரகளை செய்த 10 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: மதுபோதையில் பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியர்களை திட்டி ரகளை செய்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி சாவடித்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 25. இவரது நண்பர்கள் 9 பேர் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வெளியேறும்நேரத்தில் வளாகத்தில் டூவீலரில் வைத்து மது குடித்தனர். இதன் பின் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தலைமையாசிரியர் பாண்டியன் புகாரில், தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ரகளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மதுபோதையார்களால் ரகளையில் ஈடுபட்டது ஆசிரியர்கள், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை