உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

போலீஸ்காரர் உட்பட மூவர் மீது வழக்கு

தேனி : கம்பம் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அருண் மனைவி ஜனனி 33. 2024 பிப். 19ல் கம்பம் மணிராஜா நகர் தங்கபாண்டி. இவர் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் சிறைக் காவலராக பணிபுரிகிறார். அவரது மனைவி மேகலா, தங்கபாண்டியின் மாமியார் கற்பகவள்ளி ஆகியோருக்கும்,ஜனனி குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ஜனனி வீட்டிற்குள் அத்துமீறி மூவரும் நுழைந்து ஆபாசமாக பேசி, தாக்கி, பணம் கேட்டால் கொலை செய்வோம் என மிரட்டினர். ஜனனி புகாரில் கம்பம் தெற்கு எஸ்.ஐ., அல்போன்ஸ் ராஜா சிறைக்காவலர் தங்கபாண்டி, அவரது மனைவி மேகலா, மாமியார் கற்பகவள்ளி ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாமியார் கற்பகவள்ளியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை