உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., நிர்வாகிக்கு வெட்டு

தி.மு.க., நிர்வாகிக்கு வெட்டு

தேனி: வீரபாண்டி வெள்ளையர் பிள்ளை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி 61, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பையாவிற்கும் இடப்பிரச்னை இருந்தது.வழக்கு முன்சிப் கோர்டில் நடந்தது. இந்த வழக்கில் தி.மு.க., வார்டு செயலாளர் செல்வம் 45, என்பவர் கருப்பையாவிற்கு ஆதரவாக சாட்சி கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமசிவம் என்பவருடன் செல்வம் டூவீலரில் சென்றார். அப்போது செல்வத்தை சுப்பிரமணி அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்தார். காயமடைந்த செல்வம் க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !