உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா

ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா

தேனி: தமிழ்நாடு ஹிந்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் தேனியில் மாவட்ட சங்க துவக்க விழா நடந்தது.மாவட்டச் செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன், வியாபாரிகள் நலச் சங்க மாவட்டசெயற்குழு உறுப்பினர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சிவப்பெருமாள் வரவேற்றார்.ஜனநிதி வங்கி செயலாளர் ராஜ்மனோகரன் குத்துவிளக்கு ஏற்றினார். மாநிலத் தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச் செ்யலாளர் முருகானந்தம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் தேனி நகரச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஜமீன்தார் வணிக வளாகத்தில் வியாபாரிகள் 60 கடைகள் வைத்துள்ளனர். இக்கடைகளுக்கு வந்து செல்வோருக்கு இடையூறாக தனியார் மதுபார் அமைய உள்ளது.அதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை