உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடைகளை கடிக்கும் தெருநாய்களால் பாதிப்பு

கால்நடைகளை கடிக்கும் தெருநாய்களால் பாதிப்பு

ஆண்டிபட்டி, : கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த ஊராட்சிக்குட்பட்ட மேல பூசனூத்து, காந்திபுரம், முத்தூத்து, தேக்கிலை குடிசை ஆகிய மலைக்கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழில் அதிகம் உள்ளது.சமீப காலமாக விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. ஆட்கள் இல்லாத நேரங்களில் கட்டியிருக்கும் ஆடு, மாடுகளை தாக்குவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் பலர் வேட்டை நாய்கள் வளர்க்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேட்டை நாய்களை பராமரிக்காமல் விட்டுவிடுவர்.தெரு நாய்களாக சுற்றித்திரியும் இவைகள் ஆடு மாடுகள், கோழிகளை கடித்து விடுகின்றன. கால்நடைகளை தாக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை