உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மிதவை வாகனம் மூலம் கண்மாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்

மிதவை வாகனம் மூலம் கண்மாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம்

--பெரியகுளம், : பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் 50 ஏக்கர் பரப்பிலானது செங்குளம் கண்மாய். இக் கண்மாய் நீர் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரமாக உள்ளது. இக்கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு ஆகாயத்தாமரை படர துவங்கியது. சிறிது, சிறிதாக பரவிய ஆகாய தாமரை செடி கண்மாய் நீரே தெரியாத அளவிற்கு பசுமை புல்வெளிபோல் நீரில் படர்ந்தது. சில நாட்களில் காய்ந்து அழுகினாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் வளர்ந்தது. இதனால் கண்மாய் துர்நாற்றம் வீசியது. கொசு தொந்தரவும் அதிகரித்தது. ஆரம்பத்திலேயே இதனை அகற்றுவதற்கு பொதுமக்கள் பொதுப்புணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். எவ்வித நடவடிக்கையும் இல்லை.நவீன மிதவை வாகனம்: இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் நன்கொடை, கிராம நல கமிட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் நிதி திரட்டப்பட்டடது.கொச்சியில் இருந்து லாரியில் மிதவை வாகனம் கொண்டுவரப்பட்டு ஆகாயத்தாமரையை அகற்றும் பணி துவங்கியுள்ளது. டீசலில் இயங்கும் மிதவை இயந்திரம் நான்கு புறமும் இயக்கலாம். அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றி அப்புறப்படுத்த படுகிறது. நேற்று துவங்கிய இப்பணியை பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் துவக்கி வைத்தார். 20 நாட்களில் ஆகாயத்தாமரை அகற்றப்பட உள்ளது. தினமும் ரூ.40 ஆயிரம் செலவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்