வனப்பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் ஆண் சடலம்
சின்னமனூர்: சின்னமனூர் அருகே வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். சின்னமனூர் அருகே குச்சனூரிலிருந்து சங்கராபுரம் செல்லும் ரோட்டில், வடக்கு பகுதி ரிசர்வ் பாரஸ்ட் பகுதியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வனக் காப்பாளர் சங்கிலி ராஜா 35 , அப்பகுதியில் ரோந்து சென்றுள்ளார். ரோட்டில் இருந்து 15 அடி தூரத்தில் வனப்பகுதிக்குள் ஆண் சடலம் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடத்தது. இறந்து கிடந்த நபர் 40 வயது மதிக்கத்தக்கவர் , கைலி,பனியன் அணிந்திருந்துள்ளார். கழுத்தை சுற்றி 5 இடங்களில் கத்தி குத்து காயங்கள்,நெற்றி பகுதியிலும் காயங்களும் இருந்துள்ளது. வனக் காப்பாளர் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார். எஸ்.பி. சிவபிரசாத் இரவில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொலை வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கின்றனர். கொலையானவர், கொலை செய்தவர்கள் யார் என்பதை உறுதி செய்துள்ளனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.