மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
7 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
10 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
10 hour(s) ago
தேனி : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்களை கலெக்டர்களிடம் நேரில் வழங்க வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். கலெக்டர் தலைமையில் மனுக்கள் பெற்று துறைவாரியாக பிரித்து வழங்கி தீர்வு காணப்பட்டு வந்தது. லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மக்கள் குறைதீர் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டன.பொதுமக்கள் தங்கள் மனுக்களை பெட்டிகளில் போட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், கலெக்டர் அலுவலகத்தில் நாளை முதல் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago