| ADDED : ஏப் 09, 2024 12:30 AM
தேனி : தேனியில் உரிய அனுமதியின்றி அ.தி.மு.க.,வினரால் ரோட்டின் சென்டர் மீடியனில் வைக்கப்ப்டட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. பறக்கும்படை புகாரில் நிர்வாகி மீது வழக்கு பதிந்தனர்.தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மாலை 4:00 மணிக்கு தேனி பங்களா மேட்டில் பிரசாரம் செய்கிறார். இதற்காக கட்சியினர் பெரியகுளம் ரோடு, நேருசிலை, மதுரைரோட்டில் கருவேல்நாயக்கன்பட்டி வரை கொடிக்கம்பங்கள் ஊன்றி இருந்தனர். நகராட்சி நிர்வாகம், போலீசார் இது குறித்து அக் கட்சியினரிடம் கேட்ட போது கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.ஆனால் அவ்வழியாக சென்ற பொதுப்பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா கொடிகளை அகற்ற உத்தரவிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆய்வு செய்தார், ஆய்வில் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி பெறாதது தெரியவந்தது. அதனை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தாசில்தார் ராணி, நகரமைப்பு அலுவலர், வி.ஏ.ஓ., ஜீவானந்தம், போலீசார் அ.தி.மு.க.,வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்ற பின்னர் கொடிக்கம்பங்கள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் கொடிக்கம்பங்களை அகற்றினர். சில இடங்களில் அ.தி.மு.க.,வினரே கொடிகம்பங்களை கழட்டி சென்றனர். கொடிகம்பங்கள் தொடர்பாக பறக்கும்படையினர் புகாரில் போடி நிர்வாகி சதிஷ்குமார் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.