உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

கடமலைக்குண்டு: கண்டமனூரைச் சேர்ந்தவர் விவசாயி காளிச்சாமி 85, இவரது மகன் அழகர் 55, இவர்களுக்கிடையே சில மாதங்களாக சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஏப்., 30ல் காளிசாமி கணேசபுரம் அருகே உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற அழகர் வழக்கம் போல சொத்து பிரித்து தர வலியுறுத்தி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அரிவாளை எடுத்து காளிசாமியை தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.அங்கிருந்தவர்கள் காளிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைமறைவாக இருந்த அழகரை நேற்று கண்டமனூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை