உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்படுத்தப்படாத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பயணம்

பயன்படுத்தப்படாத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பயணம்

தேனி: தேனி லோக்சபா தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கூடுதலாக அனுப்பிய இயந்திரங்கள் போடி, தேனி, பெரியகுளமளம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இருந்தது.கூடுதலாக அனுப்பிய இயந்திரங்கள், உட்பட அனைத்து இயந்திரங்களும் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாகாப்பு அறையில் வைக்கப்பட்டது.முதல் நிலை சரிபார்த்தல் பணி, லோக்சபா தேர்தலுக்காக சின்னங்கள் பொருத்தும் பணி, ஏப்.,18 ல் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவில் செயல்படாத 10 ஓட்டுபதிவு இயந்திரம், 16 கட்டுப்பாட்டு கருவி, வி.வி.,பேட் 49 ஆகியவை பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.செயல்படாத இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்தில் இருந்து பெங்களுரூ அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ