உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

டம்டம் பாறை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

தேவதானப்பட்டி : டம்டம்பாறை அருகே கொண்டை ஊசி வளைவில் வேன் பிரேக் பிடிக்காததால் ரோட்டோரம் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜாபர் 28. ஜாவீத் 22. அசார் 27. நாகராஜ் 25. உமர் 27. ஆரிப் 25. சையது அபுதாஹிர் 22 உட்பட 17 பேர் நேற்று காலை கொடைக்கானலுக்கு உறவினர் வீட்டு திருமணத்திற்கு வேனில் சென்றனர்.நேற்று மாலை ஊருக்கு திரும்பும்பேது மாலை 5:00 மணிக்கு டம்டம்பாறை அருகே கொண்டை ஊசி வளைவில் வந்த போது வேன் பிரேக் பிடிக்காமல் ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்தனர். இவர்கள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். தேவதானப்பட்டி போலீசார் டிரைவர் யார் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை