உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர் கல்வி தரத்தை மேம்படுத்த கலெக்டர்கள் தலைமையில் 18 பேர் குழு

மாணவர் கல்வி தரத்தை மேம்படுத்த கலெக்டர்கள் தலைமையில் 18 பேர் குழு

தேனி:பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் 18 பேர் கொண்ட மாவட்ட கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அரசின் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் தலைமையில் எஸ்.பி., நகராட்சி அல்லது மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாற்றுத்திறனாளி நல அலுவலர், பொது சுகாதார துணை இயக்குனர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நால்வர், ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழுவிற்கு சி.இ.ஓ., செயலராக செயல்படுவார்.இக்குழு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு உயர்கல்வி, பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வருதல், அவர்கள் வருகை பதிவேட்டை கண்காணித்தல், எண்ணும் எழுத்து, இல்லம்தேடி கல்வி, வாசிப்பு இயக்கம் ஆகியவற்றை கண்காணிக்கும். மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி கல்வி உதவித்தொகை பெறுதல், படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துதல், புத்தகம் வாங்க ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ