உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறைதீர் கூட்டத்தில் 346 மனுக்கள்

குறைதீர் கூட்டத்தில் 346 மனுக்கள்

தேனி : கலெக்டர் அலுவகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 346 மனுக்கள் வழங்கினர்.கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 346 மனுக்கள் வழங்கினர். புரட்சி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள்வீரகுரு, சின்னமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியகுளம் ரோட்டில் மரங்கள் அகற்றுவதை தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி