உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் 99.8 மி.மீ., மழை

மாவட்டத்தில் 99.8 மி.மீ., மழை

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசி மக்கள் அவதி பட்டனர். இரவிலும் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தணிக்கும் வகையில் கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவானது.அதிகபட்சமாக ஆண்டிப்பட்டியில் 38.2மி.மீ., சண்முகாநதி 11.2 மி.மீ., தேக்கடி 15.6 மி.மீ., பெரியாறு அணை 14.4 மி.மீ., கூடலுார் 7.8 மி.மீ., உத்தமபாளையம் 3.4 மி.மீ., வைகை அணை 4மி.மீ., மஞ்சளாறு அணை 1 மி.மீ., வீரபாண்டி 3 மி.மீ., என மொத்தம் 99.8 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ