உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் கண்டக்டரிடம் கத்தியை காட்டி ரகளை செய்தவர் கைது இருவர் மீது வழக்கு

பஸ் கண்டக்டரிடம் கத்தியை காட்டி ரகளை செய்தவர் கைது இருவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே பஸ்சை வழிமறித்து கத்தியை காட்டி கண்டக்டர் பணப்பையை பறித்து பணத்தை கொட்டிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் சென்றது. பெரியகுளம் அருகே கைலாசபட்டி அருகே செல்லும் போது, முன்னாள் சென்ற காரில் பயணம் செய்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டியபடி சென்றனர். பஸ் கண்டக்டர் அருண்குமார் 39. ஏன் இப்படி நடந்து கொள்கீறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் பஸ்சை பின்தொடர்ந்தது காரில் சென்றவர்கள் தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியில் பஸ்சை மறித்து கண்டக்டர் அருண்குமாரை கத்தியால் மிரட்டி பணப்பையை பறித்து டிக்கெட்,பணத்தையும் பஸ்சில் கொட்டி விட்டு தப்பினர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதில் எருமலைநாயக்கன்பட்டியைச் ராஜவேல் 24, கைது செய்யப்பட்டார். இவரது நண்பர்களான தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான ரிசிகேசவன் 23. அழகுராஜா 24 மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை