உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு

பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு

சின்னமனுார் : சின்னமனுார் பெரிய வாய்க்கால் கரையை உடைத்து சேதப்படுத்தி பைப் லைன் பதித்தவர் மீது பொதுப் பணித்துறை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உத்தம பாளையத்தில் இருந்து சின்னமனுார் செல்லும் ரோட்டில், பைபாஸ் விலக்கு அருகில் சின்னமனுார் பெரிய வாய்க்கால் கரையை 23 மீட்டர் நீளத்திற்கும், 0.90 மீட்டர் அகலத்திற்கும், 2 மீட்டர் உயரத்திற்கும் உடைத்து சேதப்படுத்தி பைப் லைன் அமைத்துள்ளார். தகவலின் பேரில் உத்தமபாளையம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ்குமார், சின்னமனுார் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கன்னிசேர்வை பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த கரை சேதப்படுத்தியது தொடர்பாக சின்னமனுார் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை