உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாலிபருக்கு கத்திக்குத்து; நால்வர் மீது வழக்கு

வாலிபருக்கு கத்திக்குத்து; நால்வர் மீது வழக்கு

தேனி: அல்லிநகரம் கம்பர் தெரு அர்ஜூன் மகன்கள் தீபக், வினோத்குமார். இவர்களுக்கும், அதேப்பகுதி இளங்கோ தெரு தினேஷ்குமார் 23, தரப்பினருக்கும் குடும்ப பிரச்னையால் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் தினேஷ்குமார். அங்கு சென்ற தீபக், வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வர் தகராறு செய்தனர். பின் தினேஷ்குமாரின் சகோதரர் ரஞ்சித்குமாரையும் தாக்கினர்.பின் தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய இருவர் தினேஷ்குமாரை பிடித்துக் கொள்ள, கத்தியால் தீபக், தினேஷ்குமாரை பல இடங்களில் குத்தி காயப்படுத்தினார். காயமடைந்த தினேஷ்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். அவரின் தாய் லதா புகாரில், தீபக், அவரது சகோதரர் வினோத்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வர் மீது, அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை முயற்சி உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து தீபக்கை கைது செய்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை