உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி மகள் நர்மதா 42. சின்னமனூர் தெற்கு முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முகமது இக்பால் மகன் அப்துல்காதர் 49. இருவரும் 2008ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு குழந்தைகள் உள்ளது. அப்துல்காதர் பொதுப்பணித்துறையில் தற்காலிக பணியாளராக போடியில் பணிபுரிந்து வருகிறார். பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனியில் பெருமாள்சாமி ரூ.60 லட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதில் மகளும், மருமகனும் வசித்து வந்தனர்.இந்நிலையில் சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக நர்மதா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை எடுக்க பெரியகுளம் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்துல்காதர், நர்மதாவை அவதூறாக பேசி அடித்துள்ளார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை