உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதி

கலெக்டர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதி

தேனி : பணத்தகராறில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் அலுவலகத்திற்கு கணவன், மனைவி டீசலுடன் வந்தனர். போலீசார் அவர்களை எஸ்.பி.,அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.டி.கள்ளிபட்டி முருகன் 50, இவரது மனைவி ஜெயந்தி இவர்கள் சொந்தமாக செங்கல் சூளை வைத்துள்ளனர். இருவரும் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு 5லிட்டர் கேனுடன் வந்தனர். பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் கேனில் டீசல் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், உறவினருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறி தென்கரை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்காதவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு டீசலுடன் வந்தது தெரிய வந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எஸ்.பி., அலுவலகத்திற்கு தம்பதியினரை அனுப்பி வைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தென்கரை போலீசில் புகார் தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை