உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் காட்சிப்பொருளான மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்

தேனியில் காட்சிப்பொருளான மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்

தேனி: பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்தாண்டு பேரூராட்சிகள், நகராட்சி நிர்வாகங்களுக்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. தேனி நகராட்சிக்கும் ஒரு இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அதிகாரிகள் நகராட்சி வளாகத்தில் பொருத்தினர். இத பல நாட்கள் பயன்பாடின்றி மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.இதனால் பொதுமக்கள் பயன்படுத்த இயலாத சூழல் உள்ளது.பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, வார சந்தை பகுதிகளில் வைத்தால் அதிகம் பயனடைவர். மேலும் இந்த இயந்திரங்களை அதிக இடத்தில் வைத்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி