உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு நோட்டீசுடன் களம் இறங்கிய சமூக ஆர்வலர் மூணாறில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

விழிப்புணர்வு நோட்டீசுடன் களம் இறங்கிய சமூக ஆர்வலர் மூணாறில் அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

மூணாறு: மூணாறில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள் என சமூக ஆர்வலர் சேலக்கல் கணேசன் கோரிக்கைகளை கொண்ட நோட்டீஸ் வெளியிட்டு வழக்கம்போல் களம் இறங்கினார்.கேரளாவில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. ரோடு, மருத்துவம், குடிநீர், வாகனம் நிறுத்தும் இடம், பஸ் ஸ்டாண்ட் உள்பட அடிப்படை இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் மாறி, மாறி ஆட்சி செய்யும் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூ., ஆகிய கூட்டணி அரசுகள் மூணாறை கண்டு கொள்வதில்லை. அதனால் மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களான தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் மூணாறைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேலக்கல் கணேசன் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட காலமாக அரசு அலுவலகங்களுக்கு படியேறி வருகிறார். இருப்பினும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கு அரசுகள் தயாராகுவது இல்லை. அந்த ஆதங்கத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட நோட்டீசுடன் களம் இறங்குவது வழக்கம். இந்த முறையும் அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்டி 20 அம்ச கோரிக்கைகளுடன் களம் இறங்கியுள்ளார். அவற்றை செயல்படுத்துவதாக உறுதி அளிக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு வேட்பாளர்கள் செவி சாய்ப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.'வரும் தலைமுறையினரின் நலனுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள். அதுவரை என்னுடைய பணி தொடர்ந்து கொண்டு இருக்கும், என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ