உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

தேனி : ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தர நாடார் தெரு வெங்கடசாமி. இவரது மகன்கள் சிரஞ்சிவி 21, யோகேஷ் 19. இவர்கள் நண்பர்களுடன் டூவீலரில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். யோகேஷ் நண்பருடன் ஒரு டூவீலரிலும், சிரஞ்சீவி தனியாக ஒரு டூவீலர் என பதிவு எண் இல்லாத டூவீலரிலும் சென்றனர். பங்களாமேடு அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிரஞ்சீவி தடுமாறி விழுந்தார். பின் அந்த வாகனத்தின் சக்கரம் அவரது தலையில் ஏறியதில் சம்பவ இடத்தில் பலியானார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ