உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக 380 ஆசிரியர்கள்

உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக 380 ஆசிரியர்கள்

தேனி: மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள 380 ஆசிரியர்களை அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான பணியினை பள்ளிக்கல்வித் துறையினர் துவங்கி உள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையான ஆசிரியர்களை விட கூடுதலாக உள்ள 5546 ஆசிரியர்கள் கண்டறியப் பட்டுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிக பணிமாற்றம் செய்ய கல்வித்துறை சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள், பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்ப பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் 68 தொடக்கப் பள்ளிகளில் 218 ஆசிரியர்கள், உதவி பெறும் 37 நடுநிலைப் பள்ளிகளில் 162 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். வட்டார அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு இவர்களை ஜூன் 10க்குள் தற்காலிக பணி வழங்குவதற்கான நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்