மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
14 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
14 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
17 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
17 hour(s) ago
ஆண்டிபட்டி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் ஓட்டுக்களை வசமாக்க அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு வருகின்றனர்.தேனி தொகுதிக்கு தி.மு.க., சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமி, பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., சார்பில் தினகரன் வேட்பாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் அறிவிப்புக்கு பின் ஆண்டிபட்டி வந்த தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் அந்தந்த பகுதியில் நிலவும் பிரச்சனைகள், பொதுமக்களின் மனநிலை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கேட்டு வருகின்றனர்.ஏற்கனவே அ.தி.மு.க., விற்கு சாதகமான ஓட்டுக்கள், ஆளும் கட்சியினர் மீதுள்ள அதிருப்தி ஓட்டுக்கள் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக்கும் முயற்சிகளை அ.தி.மு.க.,வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago