உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் பயிரில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

நெல் பயிரில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை

கூடலூர் : கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை உதவி இயக்குனர் பூங்கோதை ஆலோசனை வழங்கியுள்ளார்.அவர் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்கில் குறுவை நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தட்ப வெப்பநிலை மாற்றம் காரணங்களால் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தழைச்சத்து உரமாக யூரியா அதிக அளவில் இடக்கூடாது. யூரியாவை மூன்று முறை பிரித்து இட வேண்டும். வரப்புகளில் புல், பூண்டுகளை இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும். இரவு 7:00 முதல் 9:00 மணி வரை விளக்குப் பொறி வைக்க வேண்டும். இலை சுருட்டுப் புழு தாக்குதல் தென்பட்டால் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி ஏக்கருக்கு 2 சி.சி., பயன்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறை, மூன்று வாரங்களுக்கு பயன்படுத்த வேண்டும். தண்டு துளைப்பான் தாக்குதல் தென்பட்டால் டிரைக்கோ கிரம்மா ஜப்பானிகம் முட்டை ஒட்டுண்ணி ஏக்கருக்கு 2 சி.சி., பயன்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறை, மூன்று வாரங்கள் பயன்படுத்த வேண்டும்.பொருளாதார சேத நிலை அறிந்து ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்த வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் 10 சதவீதம் ஏற்பட்டால் பவேரியா பேசியானா ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். புளுபென்டிமைடு 20 மில்லி, பிப்ரோனில் 20 கிராம், இன்டக் சோகார்ப் 80 மில்லி, தயோமெத்தாக்சம் 40 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும். இலைக்கருகல் தென்பட்டால் கார்பன்டசிம் 100 கிராம் ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை