உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அல் ஹிக்மா மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

அல் ஹிக்மா மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அல் ஹிக்மா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தொடர்ந்து அரசு பொதுத் தேர்வுகளில் நூறு சதவீத நேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.இப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி தஸ்லிம் 600 க்கு 572, முஸினா பேகம் 537, முகமது யாசிர் 528 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் நிதா பாத்திமா 500 க்கு 490, முகமது நவ்பால் நதீம் 482, மதீஹா 465 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பள்ளி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நுாறு நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. சாதனை மாணவர்களை பள்ளியின் செயலர் முகமது சைபுல் இஸ்லாம் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை