மேலும் செய்திகள்
இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை
05-Mar-2025
பெரியகுளம்:தேனி மாவட்டம், கடமலைக்குண்டு வனப்பகுதி அருகே விவசாய நிலத்தில் பிப்., 26 உடலில் காயங்களுடன் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 45, வருஷநாடு வைகைநகரைச் சேர்ந்த கருப்பையா 55, இறந்து கிடந்தனர். கருப்பையா இறப்பில் மர்மம் உள்ளதாக மகன் சந்திரசேகரன் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினர். இவ் வழக்கில் கடமலைக்குண்டு மேலப்பட்டியைச் சேர்ந்த கணேசன் 32, மார்ச் 3ல் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடமலைக்குண்டு கோவில்பாறை தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி 50, நேற்று பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கமலநாதன் முன்னிலையில் சரணடைந்தார்.
05-Mar-2025