உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு என்ற பெயரில் தமிழக அரசு பாரட்டு சான்றிதழ், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்குகிறது. மாவட்டத் திறனறி குழுவின் முன்னிலையில் நடக்கும் ஆய்வில் தேர்வு செய்யப்படுவோர் பெயர் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும். முற்றோதல் போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது. விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலககத்தில் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை 91596 68240 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்.,6க்குள் நேரடியாகவோ, தபால் மூலமோ மாவட்டத் தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை