உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தேனி: 'மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.' என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் சின்னமனுார், தேனி, கடமலை மயிலாடும்பாறை, போடி ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க வேளாண் துறை சார்பில் ஏற்பாடுகள் நடக்கிறது.மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் குறைந்த பட்சம் ஒரு எக்டேர் நிலம் வைத்திருக்க வேண்டும். இதில் ஒரு எக்டேர் பரப்பில் கால்நடை தீவனங்கள் வளர்க்க சோளம், மக்காச்சோள விதைகள், ஒரு கால்நடை, வரப்புகளில் நடவு செய்ய பழக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி 4, மண்புழு உரம் தயாரிக்க பிளாஸ்டிக் உர தயாரிப்பு பை உள்ளிட்டவை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை