உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணி நியமன ஆணை வழங்கும் விழா

பணி நியமன ஆணை வழங்கும் விழா

தேனி : தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் வரவேற்றார். சென்னை வெபிராகஸ், டி.வி.எஸ்., பாக்ஸ்கான், யுனிடெக், கேவை எல்.ஜி.பி., சபரி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுனங்களில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.விழாவில் சங்க பொதுச்செயலாளர் மகேஸ், கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணைச்செயலாளர் விஜயன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவர்கள் திருப்பதிராஜா, தீர்க்கதரிசனன், பேராசிரியர்கள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ