உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாணவிகளுக்கு பாராட்டு விழா

தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலும், தேசிய அளவில் நடந்த 'ரங்கோச்வ்' போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தேசிய போட்டிகளில் மாணவிகள் 410 பேர் பங்கேற்று முதல் பரிசாக மாணவி மித்ரா ஸ்கேட் ஸ்கூட்டர் வித் டிராபி கோப்பை பரிசாக பெற்றார். 33 மாணவிகள் தங்கப்பதக்கங்கள், 26 மாணவிகள் வெள்ளி பதக்கங்கள், 15 மாணவிகள் வெங்கல பதக்கஙகள் பெற்றுள்ளனர். அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று பிரைட் சைல்டு விருது பெற்ற கிரத்திகா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். பள்ளியின் செயலர் லட்சுமணன், இணைச் செயலாளர் அருஞ்சுனைக்கனி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை