உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேனி லோக்சபா தொகுதி பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலில் பயன்படுத்த உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஏப்.10 ல் பொருத்தப்பட்டது. இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.இந்த அறைக்கு நேர், வலது, இடது மூன்று பகுதிகளிலும் கேமராவால் கண்காணிக்கப்படுகிறது. எட்டு மணி நேரம் இடைவெளியில் மூன்று போலீசார்கள் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் (ஏப்.18) தேர்தல் அலுவலர்கள், போலீஸ், வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் பூட்டின் சீல் அகற்றப்பட்டு, அந்தந்த ஓட்டு சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ